கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு..!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (27ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-06-27 13:00 GMT

கோபிசெட்டிபாளையம் நகராட்சி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை உள்ளிட்ட குடிமைபொருட்கள் சேமிப்பு இருப்பு அறையில் ஆய்வு மேற்கொண்ட ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.

ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் அனைத்து துறைகளின் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (27ம் தேதி) கோபிசெட்டிபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின்போது, வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் கோபிசெட்டிபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல், மஞ்சள், தேங்காய் கொப்பறை உள்ளிட்ட விளைபொருட்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து, இருப்பு வைக்கப்பட்டுள்ள சேமிப்பு கிடங்கினையும், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மொத்த விற்பனை கிடங்கில் மதுவகைகள் இருப்பு, கடைகளுக்கு பிரித்து அனுப்பும் பணி மற்றும் பராமரிக்கப்படும் பதிவேடுகள் ஆகியவற்றினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை உள்ளிட்ட குடிமைபொருட்கள் சேமிக்க வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, இருப்பு விபரத்தினை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், கோபிசெட்டிபாளையம் நகராட்சி சார்பில் நூலகம் (ம) அறிவுசார் மையம் 7000 ச.அடி பரப்பளவில் ரூ.1.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதையும், இம்மையத்தில் போட்டித்தேர்வுகளுக்கு தேவையான பாடபுத்தகங்கள், தினசரி நாளிதழ்கள், போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பிற்கு தேவையான அரங்குகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


அதனைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.6.69 கோடி மதிப்பீட்டில் 31 கடைகளுடன் தினசரி சந்தையுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதையும், கோபி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 4 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதையும், ரூ.4.68 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதையும், இச்சுத்திகரிப்பு நிலையத்தில் நாளொன்றுக்கு 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருவதையும், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் நுண் உர செயலாக்க மையத்தில் பையோ கேஸ் உற்பத்தி செய்யப்பட்டு வருவதையும் நேரில், பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின்போது, கோபி நகர்மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ், கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையாளர் சுபாஷினி, நகராட்சி செயற்பொறியாளர் சிவக்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளர் அம்சவேணி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை செயலாளர் சாவித்திரி, கோபிசெட்டிபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் குணசேகரி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர். 

Tags:    

Similar News