ஈரோட்டில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த மாவட்ட ஆட்சியர்
ஈரோட்டில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.;
மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாளையொட்டி, ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 156வது பிறந்தநாள் விழா கோலாகலமாக இன்று (2ம் தேதி) புதன்கிழமை கொண்டாடப்பட்டது. காந்தியின் திருவுருவச் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அந்த வகையில், ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில், ஈரோடு ஊராட்சி ஒன்றியக்குழு அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கி, காந்தி சிலைக்கு கதர் சிட்டம் மற்றும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இவ்விழாவில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.சுகுமார், ஈரோடு வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், ஈரோடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.