கோபிசெட்டிபாளையத்தில் 22 விநாயகர் சிலைகள் கரைப்பு ஊர்வலம்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் 22க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
கோபிசெட்டிபாளையம் பகுதியில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் 22க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகர பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னனி அமைப்பின் சார்பில் 22 இடங்களில் சிலைகள் நிறுவப்பட்டு மூன்று நாட்கள் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்ட பின் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர் நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்து முன்னனியின் மாநில செயலாளர் செந்தில்குமார் மற்றும் பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இதனையடுத்து கோபி கரட்டூர் பகுதியிலிருந்து 20க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்களின் மூலமாக புறப்பட்டு கோபி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட பின் சந்தியா வனத்துறையில் உள்ள தடப்பள்ளி வாய்க்காலில் கரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து முன்னனி அமைப்பின் மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரபாகரன், நகர செயலாளர்கள் சந்திரன், கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.