பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளியில் பேரிடர் மீட்புப்படை ஒத்திகை நிகழ்ச்சி

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு படையினரின் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-07-04 19:30 GMT

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இயற்கை பேரிடர் காலங்களில் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் செய்முறை பயிற்சி செய்து காட்டிய போது எடுத்த படம்.

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு படையினரின் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு, மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர்களினால் பாதிக்கப்படக்கூடிய இடங்களை ஆய்வு மேற்கொள்ளவும், கரையோரப்பகுதிகள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதன் படி, தேசிய பேரிடர் மேலாண்மை பாதுகாப்பு சட்டம் விதிப்படி இயற்கை பேரிடர் நிகழும் பகுதிகளை ஆராய்ந்து மற்றும் வெள்ளம், புயல், நிலநடுக்கம். சுனாமி, நிலச்சரிவு, இரசாயன கசிவு (விஷவாயு தாக்குதல்) போன்ற பேரிடர் குறித்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவியர்களுக்கும் மற்றும் பொதுமக்கள் இயற்கை பேரிடர் காலங்களில் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியும் செய்முறை பயிற்சியும் செய்து காட்டி வருகின்றனர்.

அந்த வகையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 4வது பட்டாலியன் (என்டிஆர்எப்) தேசிய பேரிடர் மீட்பு படையினர் குழு கமாண்டர் சதீஷ்குமார் தலைமையில் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில், பெருந்துறை வட்டாட்சியர் பூபதி, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் 14 நாட்கள் முகாமிட்டு, இயற்கை பேரிடர் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர்.

Tags:    

Similar News