ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் இவ்ளோ மனுக்களா..?
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (23ம் தேதி) நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (23ம் தேதி) நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டு கலைந்திடுவதற்காக வருவாய் கோட்ட அளவில் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையிலும் மற்றும் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டு கலைந்திடுவதற்கு இன்று (23ம் தேதி) ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனை பட்டா, வீடு, பேட்டரியால் இயங்கும் இரு சக்கர வாகனம், தொழில் துவங்க கடனுதவி, இ-சேவை மையம் துவங்க, மாற்றுத்திறனாளி உபகரணங்கள், பெட்ரோல் ஸ்கூட்டர், பராமரிப்பு உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட 683 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றார்.
தொடர்ந்து, பெறப்பட்ட மனுக்களை தொடர்புடைய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகள் ஆகியவை குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கமாக எடுத்துரைத்தார்.
இக்கூட்டத்தில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார் (பொ), இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.அம்பிகா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.