பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை..!
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேருவதற்கு 20ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.;
பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை.
பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேருவதற்கு 20ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரியில் 2024 2025ம் கல்வியாண்டிற்கு நேரடி இரண்டாம் ஆண்டு முழுநேர பட்டயப் படிப்பில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன. https://www.tnpoly.in என்ற இணையதளத்தில் வருகிற 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இக்கல்லூரியில் அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல். மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் மற்றும் கணினி பொறியியல் ஆகிய ஐந்து முழுநேரப் பாடப்பிரிவுகளிலும் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யும் பொதுப்பிரிவினர் ரூ.150 பதிவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். பழங்குடி மற்றும் பட்டியல் பிரிவினருக்கு விண்ணப்ப பதிவுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
நேரடி இரண்டாம் ஆண்டு சேர விரும்பும் மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் physics/ Mathematics/ Chemistry/ Computer Science/ Electronics/ Information Technoloy/ Biology/ Information Practices/ Biotechnology/ Technical Vocational Subject/ Agriculture / Engineering Graphics / Business Studies/ Enterpreneurship (Any of the Three) & ITI அல்லது அதற்குச் சமமான படிப்பு பயின்றிருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.