சென்னிமலை ஒன்றிய கிராம ஊராட்சிகளில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேற்று (4ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-07-04 19:15 GMT

வடுகபாளையம் முதல் கே.ஜி.வலசு, பெருமாள்மலை வரை அமைக்கப்பட்டு வரும் சாலைப்பணியினை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சென்னிமலை பேரூராட்சி, சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் வெள்ள முத்துகவுண்டன்வலசு, உப்பிலிபாளையம், முருங்கத்தொழுவு, வடுகபாளையம் கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேற்று (4ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, சென்னிமலை தேர்வுநிலை பேரூராட்சி மற்றும் அம்மாபாளையம் பகுதியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் சுமார் 15,000 பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.18.13 கோடி மதிப்பீட்டில் குடிநீர் விநியோகத் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதை நேரில் சென்று பார்வையிட்டு அவர் ஆய்வு மேற்கொண்டார்.


தொடர்ந்து, சென்னிமலை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, சிகிச்சைக்கு வந்துள்ள புறநோயாளிகள் விபரம் மற்றும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் விபரம் ஆகியவை குறித்து கேட்டறிந்து, சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, பசுவபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கும் நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள பொருட்களின் இருப்பு குறித்தும், சென்னிமலை கூட்டுறவு நகர வங்கியில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இதனையடுத்து, சென்னிமலை பேரூராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.72.80 லட்சம் மதிப்பீட்டில் வார்டு எண் 8, 10, 13-க்கு உட்பட்ட எல்லை மகாளியம்மன் தெரு, காமராஜர் தெரு, தேவஸ்தானம் கல்யாணமண்டபம் வீதி, திருஞானசம்பந்தர்வீதி மற்றும் கருப்பணன் கோவில் வீதிகளுக்கான சாலைப்பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், கே.ஜி. வலசு பகுதியில் புனித சவேரியார் அரசு நிதியுதவி தொடக்கப்பள்ளி மற்றும் உப்பிலிபாளையம் கஸ்தூரிபா அரசு உதவிபெறும் தொடக்கபள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதையும், உப்பிலிபாளையம் நியாவிலைக்கடை, முருங்கத்தொழுவு ஊராட்சி வடுகபாளையம் பகுதியில் நபார்டு திட்டத்தின்கீழ் வடுகபாளையம் முதல் கே.ஜி.வலசு வரை ரூ.46.17 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


தொடர்ந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.482.36 கோடி மதிப்பீட்டில் 22 ஊராட்சிகளைச் சேர்ந்த 434 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதில், வெள்ளமுத்துகவுண்டன்வலசு நீர்சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள முகாசிபிடாரியூர் 1010 காலனிக்கு வெள்ளகவுண்டன்வலசு நீர்சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தரைமட்ட தொட்டிக்கு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளதையும் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வுகளின்போது, சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர்கள் குருசாமி, ரேவதி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர்பாபு, செயல் அலுவலர் ரவிக்குமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News