சென்னிமலை முருகன் கோயிலில் ரூ.7.53 கோடியில் மேம்பாட்டு பணி துவக்கி வைத்த முதல்வர்
Erode News- ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோயிலில் ரூ.7.53 கோடி மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
Erode News, Erode News Today- சென்னிமலை முருகன் கோயிலில் ரூ.7.53 கோடி மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது இந்தக் கோவிலில் மலைப்பாதை மேம்படுத்துதல் மற்றும் சீரமைத்தல் பணி ரூ.6 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டிலும், மலைக்கோவில் பின்பகுதியில் பக்தர்கள் உணவருந்தும் கூடம் ரூ.83 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று (24ம் தேதி) தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இம்மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
சென்னிமலை முருகன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், ஈரோடு மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார், மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், இந்து அறநிலைய துறை ஈரோடு மண்டல இணை ஆணையர் பரஞ்ஜோதி, சென்னிமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் காயத்ரி இளங்கோ, சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், சென்னிமலை கோவில் செயல் அலுவலர் சரவணன், ஆய்வர் மாணிக்கம், பெருந்துறை சரக ஆய்வர் குகன் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.