ஜம்பை பெரியமோளபாளையத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் தாமதம்: பொதுமக்கள் புகார்

ஈரோடு மாவட்டம் ஜம்பை பேரூராட்சி பெரியமோளபாளையத்தில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாக பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்துள்ளனர்.

Update: 2023-05-18 20:30 GMT

பவானி-சத்தியமங்கலம் சாலையில் சிறுபாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டதை காணலாம்.

இதுதொடர்பாக பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அளித்த மனு விவரம், ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் ஜம்பை பேரூராட்சி பெரியமோளபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் தொடங்கி, கலுங்குப்பாலம் வரை வடிகால் கட்டும் பணி கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. மேலும், சாலையின் இடையே சிறிய பாலம் அமைக்கும் பணியும் கடந்த ஒன்றை மாதத்திற்கும் மேலாக சரிவர பணி செய்திடாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.


இதற்காக தோண்டி எடுக்கப்பட்ட மண் குவியலாக குவிக்கப்பட்டுள்ளது. சாலையில்  வேலை செய்யப்படுகிறது, மாற்றுப்பாதையில் செல்லவும் எனும் எச்சரிக்கை போர்டும் இதுநாள் வரையிலும் வைக்கப்படவில்லை. தோண்டப்பட்ட குழிக்கு அருகில் ஒளிரும் பட்டை ரோலும் கட்டப்படவில்லை.இதன் காரணமாக இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் இரவு நேரங்களில் விழுந்து விபத்துக்குள்ளாகி வருவது தொடர் நிகழ்வாக உள்ளது.


எனவே, உயிர்சேதம் நடைபெறும் முன்பாக இவ்விவரத்தை சம்பந்தப்பட்ட துறைக்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டு மக்களை விபத்துகளிலிருந்து காப்பாற்றிட வேண்டும். மேலும் மேற்கண்ட இடத்தில் தோண்டியெடுக்கப்பட்ட மண் இவ்வளவு இருக்கும்போது, வடிகால் துவங்கிய இடத்திலிருந்து முடிவு பெறும் இடம் வரை தோண்டியெடுக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான யூனிட் பெறும் மண் கட்டிடம் கட்டப்பட்டுள்ள இடத்திற்க்குகூட குழியை நிறப்பிட மறுத்து,எங்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டுள்ளது.? என்பதனை விசாரணை செய்து விற்பனை செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News