பவானி லட்சுமி நகரில் மேம்பாலம் அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் பவானி லட்சுமிநகரில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று (8ம் தேதி) நடைபெற்றது.

Update: 2024-07-08 08:30 GMT

லட்சுமிநகரில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எடுத்த படம்.

பவானி லட்சுமிநகரில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று (8ம் தேதி) நடைபெற்றது.

ஈரோடு பவானி அருகே லட்சுமி நகரில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. பவானி, அந்தியூர், மேட்டூர் வழியாக வரும் வாகனங்களும், ஈரோட்டில் இருந்து இந்த வழியாக செல்லும் வாகனங்களும், மேட்டூர் சேலம் செல்லும் வாகனங்களும், இந்த வழியாக வந்து செல்கின்றன.

பகல் இரவு என்று பாராமல் மிக அதிக அளவில் வாகனங்கள் செல்வதால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சில நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதமும் ஏற்பட்டு விடுகிறது. நடந்து செல்பவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

இதனால், சேலம் முதல் கோவை தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமி நகர் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அனைத்து கட்சியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை லட்சுமி நகர் நால்ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைத்து வணிக நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் செய்திருந்தார்.

Tags:    

Similar News