ஈரோட்டில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கு எதிராக நடந்து வரும் இன அழிப்பை கண்டித்து, ஈரோட்டில் தலித் விடுதலை கட்சி மற்றும் முற்போக்கு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2023-07-11 10:30 GMT

ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டம்.

மணிப்பூரில் பழங்குடியின மக்களுக்கு எதிராக நடந்து வரும் இன அழிப்பை கண்டித்து, ஈரோட்டில் தலித் விடுதலை கட்சி மற்றும் முற்போக்கு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பழங்குடியின மக்களின் உரிமைகளை பறிக்கின்ற மணிப்பூர் மாநில மத்திய அரசுகளை கண்டித்து ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலித் விடுதலைக் கட்சி முற்போக்கு அமைப்புகள் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில இணை பொது செயலாளர் சகுந்தலா தங்கராஜ் தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் ஆறுமுகம் மண்டல செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சரஸ்வதி பூங்கொடி ஆகியோர் வரவேற்றனர்.

கூட்டத்தில் தலித் விடுதலைக் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் செங்கோட்டையன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். இதில் மக்கள் விடுதலை முன்னணி மாரிமுத்து அருந்ததி இளைஞர் பேரவை வடிவேல் ராமன், ஜனநாயக மக்கள் கட்சி ஆத்தூர் கண்ணன் உழைப்பாளி மக்கள் கட்சி முருகேசன் மற்றும் நிர்வாகிகள் ஜெகநாதன் மூர்த்தி சதீஷ் கேரள மாநில பொறுப்பாளர் சிவன் குட்டி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்பாளர் மகேஸ்வரி நன்றி கூறினார்.

Tags:    

Similar News