ஈரோடு: தவறான சிகிச்சையால் மனைவி உயிரிழப்பு - கணவர் தீக்குளிக்க முயற்சி
ஈரோட்டில் தவறான சிகிச்சையால் மனைவி உயிரிழந்ததை கண்டித்து தனியார் மருத்துவமனை முன்பு கணவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.;
உறவினர்கள் சுதா மருத்துவமனை முன்பு, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
அதற்குள் காயத்திரி மூச்சின்றி கிடந்துள்ளார்.இதயத்தில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக காயத்திரி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.இதனை ஏற்க மறுத்து காந்தி, மருத்துவமனையின் முறையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் பராமரிப்பு இல்லாததால் தேவையான நேரத்தில் ஆக்சிஜன் கிடைக்காமல் மனைவி காயத்திரி உயிரிழந்ததாக மருத்துவமனை மீது புகார் தெரிவிக்கின்றார்.
மேலும், இச்சம்பவம் குறித்து மொடக்குறிச்சி தொகுதியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ சரஸ்வதி மருத்துவமனைக்கு உதவும் வகையில் நடந்து கொண்டதாக கூறி தனியார் மருத்துவமனை மீதும் அதற்கு உதவியாக இருந்த மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ மீது நடவடிக்கை நடவடிக்கை எடுத்து உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என கூறி தனியார் மருத்துவமனை முன்பு கணவர் காந்தி தீக்குளிக்க மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றினார்.
அப்போது அங்கிருந்த காவலர்கள் அவரை தண்ணீர் ஊற்றி பத்திரமாக மீட்டனர்இதனிடையே இறந்து போன பெண்னின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி சென்றனர்.