சித்தோடு அருகே வயிற்று வலியால் விஷம் குடித்த இளம்பெண் உயிரிழப்பு

பவானி அடுத்த சித்தோடு அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் விஷம் குடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2022-06-19 10:45 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு அருகே உள்ள சக்தி மூவேந்தர்நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சோபனா (வயது 37). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சரவணன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சோபனாவுக்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் வயிற்றுவலி குணமாகவில்லை என கூறப்படுகிறது.

இதனால் சோபனா தற்கொலை செய்ய முடிவு எடுத்து சம்பவத்தன்று எலி மருந்தை குடித்துள்ளார். இதையடுத்து சோபனாவை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் அவர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அதன் பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சோபனா பரிதாபமாக இறந்தார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News