சென்னிமலை அருகே தந்தையின் ரூ.3 லட்சம் பணத்தை கொள்ளையடித்து நாடகமாடிய மகள் கைது
Erode news- ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கத்தியை காட்டி மிரட்டி கை, கால்களை கட்டுப்போட்டு முகமூடி கொள்ளையர்கள் பீரோவில் தந்தை வைத்திருந்த ரூ.3 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடிய மகள் கைது செய்யப்பட்டார்.
Erode news, Erode news today- சென்னிமலை அருகே கத்தியை காட்டி மிரட்டி கை, கால்களை கட்டுப்போட்டு முகமூடி கொள்ளையர்கள் பீரோவில் தந்தை வைத்திருந்த ரூ.3 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடிய மகள் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள அர்த்தனாரிபாளையத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 73). உடல்நலம் பாதித்து வீட்டிலேயே இருந்து வந்த விஸ்வநாதனை, அதே பகுதியில் கணவருடன் வசித்து வரும் அவரது மகள் ரம்யா (வயது 35) அவரை கவனித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 8ம் தேதி தந்தையின் வீட்டில் இருந்த ரம்யாவை முகமூடி கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி கை, கால்களை கட்டிப்போட்டு, வீட்டின் பீரோவில் இருந்த ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக ரம்யா தெரிவித்தார்.
இதையடுத்து, சென்னிமலை போலீசார், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், கொள்ளை தொடர்பாக எந்த காட்சியும் பதிவாகவில்லை. பின்னர், ரம்யாவிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ரம்யா நடத்தி வந்த தொழிலில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ரூ.3 லட்சம் கடனான அவர் அதை அடைக்க தந்தையிடம் பணம் கேட்க, அவர் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தந்தைக்கு தெரியாமலேயே பீரோவில் இருந்து ரூ.3 லட்சம் பணத்தை வீட்டுக்குள் முகமூடி கொள்ளையர்கள் புகுந்து கொள்ளையடித்து விட்டு சென்றதாக நாடகம் நடத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து, போலீசார் ரம்யாவை கைது செய்து, பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தந்தையின் பணத்தை கொள்ளையடித்து விட்டு, முகமூடி கொள்ளையர்கள் புகுந்து கை, கால்களை கட்டுப்போட்டு கொள்ளையடித்ததாக நாடகமாடிய மகள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.