ஈரோடு: பள்ளி மாணவர்களுக்கு வரும் 28ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் வரும் 28ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் தகவல்

Update: 2022-04-26 12:30 GMT

கோப்பு படம்

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா பரவுதலை தடுக்கும் பொருட்டு அனைவருக்கும் தடுப்பூசி எனும் இலக்குடன் இல்லம் தேடி தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் 12 முதல் 14 வயதுடைய மாணவர்களுக்கு முதல் தவணையாக 44,710 தடுப்பூசிகள், இரண்டாம் தவணையாக 13.268 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

15 முதல் 18 வயதுடைய பள்ளி மாணவர்களுக்கு முதல் தவணையாக 89,373 தடுப்பூசிகள், இரண்டாம் தவணையாக77,321 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டிய பள்ளி மாணவர்களுக்கும், இதுவரை தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கும் அவர்கள் படிக்கும் பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News