ஈரோடு மாவட்டத்தில் 64 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 1,597 இடங்களில் நடந்த சிறப்பு முகாமில் ஒரே நாளில் 64,405 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.;

Update: 2022-07-25 09:15 GMT

ஈரோடு மாநகராட்சி காந்திஜி சாலையில் உள்ள நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்று வரும் கோவிட்-19 மாபெரும் இலவச முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் முகாமினை ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி நேற்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று 1,597 இடங்களில் 32-வது சிறப்பு தடுப்பூசி மெகா முகாம்கள் நடந்தன. இந்த பணியில் 3,196 பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த முகாமில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் நேற்று  நடந்த 32-வது சிறப்பு மெகா முகாமில் 2,213 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 34,566 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும், 27,626 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் என மொத்தம் 64 ஆயிரத்து 405 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News