குளிர்விக்கும் கோடை மழை: ஈரோடு மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்ட மக்கள் மனதை குளிர்விக்கும் வகையில் இரவில் கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 217.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Update: 2024-05-10 05:58 GMT

இரவு மழை.

ஈரோடு மாவட்ட மக்கள் மனதை குளிர்விக்கும் வகையில், இரவில் கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 217.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த 4 நாட்களாக வெயில் தாக்கமானது மெல்ல குறைந்து, ஆங்காங்கே மழை பெய்து மக்கள் மனதை சற்று குளிர்வித்து வருகிறது.

இந்நிலையில், நேற்றிரவு ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால், வெப்ப அலை குறைந்து சற்று குளிர்ச்சி நிலவியதால், விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடிவேரி பகுதியில் 53.00 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

மாவட்டத்தில் நேற்று (மே.09) வியாழக்கிழமை காலை 8 மணி முதல் இன்று (மே.10) வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேர நிலவரப்படி பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:- 

கொடிவேரி - 53.00 மி.மீ , 

கவுந்தப்பாடி - 39.4 மி.மீ , 

நம்பியூர் - 33.00 மி.மீ ,

பவானி - 29.00 மி.மீ ,

குண்டேரிப்பள்ளம் - 26.00 மி.மீ , 

கோபிசெட்டிபாளையம் - 12.2 மி.மீ ,

பெருந்துறை - 8.2 மி.மீ ,

எலந்தகுட்டைமேடு - 6.4 மி.மீ ,

வரட்டுப்பள்ளம் - 4.4 மி.மீ ,

மொடக்குறிச்சி - 4.0 மி.மீ ,

தாளவாடி - 1.5 மி.மீ ,

மாவட்டத்தில் மொத்தமாக 217.1 மி.மீ ஆகவும், சராசரியாக 12.7 மி.மீ ஆகவும் மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News