கீழ்பவானி வாய்க்காலில் புனரமைப்பு: விவசாயிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம்
கீழ்பவானி திட்டத்தின் கீழ், வாய்க்கால் பகுதிகள் புனரமைப்பு மேற்கொள்வது குறித்து விவசாயிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.
கீழ்பவானி திட்டத்தின் கீழ், வாய்க்கால் பகுதிகள் புனரமைப்பு மேற்கொள்வது குறித்து விவசாயிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (மார்ச்.13) திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில், கீழ்பவானி திட்டத்தின் கீழ், வாய்க்கால் பகுதிகள் புனரமைப்பு மேற்கொள்வது குறித்து விவசாயிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் விவசாயத்திற்கு முழுமையாக பயன்படுகின்ற வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் கான்கிரீட் தளம் அமைப்பது தொடர்பாக விவசாயிகளிடம் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளது. அதற்காக விவசாய பெருமக்களிடம் பேசி எந்த இடத்தில் தேவை எந்த இடத்தில் தேவையில்லை என்பது குறித்த விபரங்களை வழங்க வேண்டும் என்பது குறித்து விவசாயிகளிடம் கருத்துக் கேட்பதற்காக கருத்துக்கேட்புக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.
மேலும் இது தொடர்பான விபரங்களை விரைவில் வழங்குவதாக தரப்பினரிடமிருந்து சுமூகமான விவசாயிகள் தரப்பினர் தெரிவித்தனர். இரண்டு தீர்வு ஏற்பட்டு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளையும் வழங்கியுள்ளனர் அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். இக்கூட்டத்தில், கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளர் கண்ணன், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.