பட்டா பதிவிறக்கம் செய்வதில் குளறுபடி: ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் காங்கிரசார் மனு
ஆன்லைனில் பட்டா பதிவிறக்கம் செய்வதில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் என ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் காங்கிரசார் மனு அளித்தனர்.;
ஆன்லைனில் பட்டா பதிவிறக்கம் செய்வதில் உள்ள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் என ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் காங்கிரசார் மனு அளித்தனர்.
ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் திருச்செல்வம், மாவட்ட துணைத்தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மண்டல தலைவர் ஜாபர் சாதிக், மாவட்ட முன்னாள் தலைவர் ராஜேந்திரன், விவசாய அணி பெரியசாமி, சிறுபான்மை பிரிவு ஜாபர் அலி உள்பட பலர் இன்று (26ம் தேதி) ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆன்லைனில் பட்டா பதிவிறக்கம் செய்வதில் உள்ள குளறுபடிகளால் நிறைய பத்திரங்கள் கிரயம் ஆகாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், இடம் வாங்குபவர்களும், விற்பவர்களும் இதனால் மிகவும் சிரமப்படுகின்றனர்.
கல்யாணம், மருத்துவ செலவு ஆகியவற்றிக்காக இடம் விற்பவர்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யாததால் தன் தேவைக்கு பட்டா பணம் கிடைக்காமல் மாதக் கணக்கில் சிரமப்படுகின்றனர்.
மேலும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யுமாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.