ஆப்பக்கூடல் பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆணையர் ஆய்வு
Erode News Tamil- ஆப்பக்கூடல் பேரூராட்சிப் பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு.;
Erode News Tamil- ஆப்பக்கூடல் பேரூராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பேரூராட்சியில் திட்டப்பணிகள் மற்றும் புதிய பணிகளை மாநில பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ் ஆய்வு செய்தார். ஆப்பக்கூடல் பேரூராட்சியில் வளமீட்பு பூங்கா, குப்பைகளை உரம் தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல், சமுதாய கழிப்பிடம் உள்ளிட்டவற்றின் திட்ட செயலாக்க முறைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில், ஈரோடு மண்டல பேரூராட்சிகளில் உதவி இயக்குநர் சுந்தரமூர்த்தி, உதவி பொறியாளர் கணேணன், மோகன், பேரூராட்சி செயல் அலுவலர் ஹேமலதா, இளநிலை பொறியாளர் சோமசுந்தரம் மற்றும் பலர் உடனிருந்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2