ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சீரமைப்பு பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு
Erode news- பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சீரமைக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா சனிக்கிழமை (இன்று) ஆய்வு மேற்கொண்டார்.;
Erode news- ஈரோடு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சீரமைக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.
Erode news, Erode news today- பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சீரமைக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா சனிக்கிழமை (இன்று) ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சீரமைக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கள ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் 30 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள கட்டிடங்கள் பராமரிப்பு பணி மற்றும் வர்ணம் பூசுதல், முதிர்வு காலம் முடிந்த மருத்துவ இயந்திரங்கள், பயன்பாடில்லாத பழைய பொருட்களை கழித்து ஒதுக்குதல், மருத்துவமனையின் முகப்பு பகுதியில் செடிகளை வைத்து அழகு படுத்திட மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் மருத்துவமனை, கல்லூரி, சமையல் கூடம், சலவை கூடம் உள்ளிட்ட பயன்பாட்டில் உள்ள கட்டிடங்களை வர்ணம் பூசி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது உதவி ஆட்சியர் (பயிற்சி) வினய் குமார் மீனா, கல்லூரி முதல்வர் வள்ளி உட்பட மருத்துவர்கள் உடனிருந்தனர்.