ஈரோடு மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 325 மனுக்களைப் பெற்ற ஆட்சியர்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (12ம் தேதி) நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 325 மனுக்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்றார்.

Update: 2024-08-12 11:00 GMT

வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கேட்டறிந்த போது எடுத்தப் படம்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (12ம் தேதி) நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 325 மனுக்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்றார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (12ம் தேதி) நடைபெற்றது. இந்தக் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 325 மனுக்கள் பெறப்பட்டன.

பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், திருப்பூர் கோட்டம், ஈரோடு மாவட்டம், பவானி சாலை பகுதி-1 திட்டப் பகுதியில் நம்குடியிருப்பு நம் பொறுப்பு திட்டத்தின் கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் அன்னை சத்யா நகர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்போர் நலச்சங்கத்திற்கான 3 மாத இணை மானியத் தொகையாக ரூ.3.36 லட்சம் மற்றும் சங்கம் பதிவு செய்தமைக்கான பதிவு கட்டணம் ரூ.5 ஆயிரத்து 100 ஆகியவற்றிற்கான காசோலைகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ராமகிருஷ்ணசாமி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News