ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 225 மனுக்களைப் பெற்ற ஆட்சியர்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (9ம் தேதி) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 225 மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா 7 பயனாளிக்கு ரூ.16 ஆயிரம் உதவித்தொகை வழங்கினார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (9ம் தேதி) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 225 மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா 7 பயனாளிக்கு ரூ.16 ஆயிரம் உதவித்தொகை வழங்கினார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், இன்று (9ம் தேதி) திங்கட்கிழமை நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கினார்.
இந்தக் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, சக்கர நாற்காலி மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 225 மனுக்கள் வரப்பெற்றன.
இக்கூட்டத்தில், பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்று அவற்றை உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு அவர் மேற்கொண்டார்.
தொடர்ந்து, மொடக்குறிச்சி, பூந்துறை சேமூர், அம்பேத்கார் நகரில் தாட்கோ மூலம் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அதனை பராமரிப்பு செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட ஓம் சக்தி மகளிர் சுயஉதவிக்குழுவிடம் சமுதாயக் கூடத்திற்கான சாவியினை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியத்தின் மூலம் தற்காலிக தூய்மைப் பணியாளர்களின் 7 வாரிசுதாரர்களுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பிலான மகப்பேறு உதவித்தொகை மற்றும் கல்வி உதவித்தொகையினை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட மேலாளர் (தாட்கோ) அர்ச்சுன் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.