ஈரோட்டில் நடைபெற்ற மராத்தானில் பங்கேற்று ஓடிய ஆட்சியர், எஸ்.பி., முன்னாள் டிஜிபி

Erode news- ஈரோட்டில் இன்று (29ம் தேதி) காலை நடைபெற்ற ஈரோடு மராத்தான் 2024 போட்டியில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் பங்கேற்று ஓடினர்.

Update: 2024-09-29 11:30 GMT

Erode news- ஈரோட்டில் இன்று நடைபெற்ற ஈரோடு மராத்தான் 2024 போட்டியில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஆகியோர் பங்கேற்று ஓடிய போது எடுத்த படம்.

Erode news, Erode news today- ஈரோட்டில் இன்று (29ம் தேதி) காலை நடைபெற்ற ஈரோடு மராத்தான் 2024 போட்டியில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் பங்கேற்று ஓடினர்.

ஈரோட்டைச் சேர்ந்த பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து 3வது பதிப்பாக ஈரோடு மராத்தான் - 2024 எனும் மராத்தான் போட்டியை ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியில் இன்று (29ம் தேதி) காலை நடத்தியது. 21,10 மற்றும் 5 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளாக இந்த மராத்தான் நடைபெற்றது.

இம்மூன்று பிரிவு போட்டிகளை முறையே மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இம்மராத்தானில் ஆண்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தொடங்கிய இம்மாரத்தான் போட்டி, மீண்டும் அக்கல்லூரியிலேயே வந்து நிறைவு பெற்றது. இம்மராத்தானில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு ஆகியோர் பங்கேற்று ஓடினர்.

தொடக்க விழா நிகழ்ச்சியில், ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவர் சின்னுசாமி, முதலியார் கல்வி அறக்கட்டளை தலைவர் ராஜமாணிக்கம், செயலாளர் பாலுசாமி, பெருந்துறை சேப்டி மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் ராசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News