மொடக்குறிச்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-01-23 12:30 GMT

நஞ்சை ஊத்துக்குளி சாலை முதல் கருக்கம்பாளையம் ஆதிதிராவிடர் காலனி வரை தார்சாலை அமைக்கும் பணியினையும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பார்வையிட்டார்.

மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா செவ்வாய்க்கிழமை (இன்று) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின்போது, மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்டு வருவாய் திட்டத்தின் கீழ், ரூ.3.07 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தினையும், குளூர் ஊராட்சி, தாளமடை நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.6.06 லட்சம் மதிப்பீட்டில் குட்டை தூர்வாரி படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளதையும், குளூர் ஆதிதிராவிடர் காலனியில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.7.85 லட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, அதே பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நல கூடம் கட்டப்பட்டு வருவதையும், கொமார வலசு ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.4.80 லட்சம் மதிப்பீட்டில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளையும், 46 புதூர் ஊராட்சி, கொல்லம்பாளையம் பகுதியில், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.17.70 லட்சம் மதிப்பீட்டில் நஞ்சை ஊத்துக்குளி சாலை முதல் கருக்கம்பாளையம் ஆதிதிராவிடர் காலனி வரை தார்சாலை அமைக்கும் பணியினையும் பார்வையிட்டார்.


மேலும், கோவிந்தநாயக்கன்பாளையத்தில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ், ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் சிறிய அளவிலான சமுதாய சுகாதார வளாகம் அமைக்கப்பட்டு வருவதையும், லக்காபுரம் ஊராட்சி நகராட்சி நகர் நடுநிலைப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியினையும் என மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக, கோவிந்தநாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள நியாயவிலைக் கடையினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் மக்களுக்கு வழங்கப்படும் நியாயவிலைப் பொருட்களையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மொடக்குறிச்சி உதவி செயற்பொறியாளர் ரமேஷ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News