கோபி நகராட்சி வாக்கு எண்ணிக்கை மையத்தில் சாரைபாம்பு
கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் சாரைபாம்பை கண்டு அலறியடுத்து ஓடினர்.
ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சியில் நடைபெற உள்ள தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையம் கடந்த 10 நாட்களாக தயார் செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த இரும்பு பேரி கார்டுகளையும், மர பலகைகளையும் தொழிலாளர்கள் எடுத்த போது அதற்குள் இருந்து சுமார் 4 அடி நீளமுள்ள சாரை பாம்பு வெளியேறியது. அதை பார்த்த தொழிலாளி ஒருவர் துணிச்சலோடு நீண்ட தடியால் பாம்பை அடித்து கொன்றார். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.