கோபி மொடச்சூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மொடச்சூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இன்று (5ம் தேதி) நடந்தது.

Update: 2024-08-05 11:45 GMT

கோபி மொடச்சூரில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் எடுக்கப்பட்ட படம்.

 கோபி அருகே உள்ள மொடச்சூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இன்று (5ம் தேதி) நடந்தது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாதிபாளையம், மொடச்சூர் மற்றும் கலிங்கியம் ஆகிய மூன்று ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்களிடமிருந்து அரசு சார்பில் வழங்கப்படும் பல்வேறு நலத் திட்டங்களுக்கான மனுக்களை பெறும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மொடச்சூரில் நடைபெற்றது.

கோபி கோட்டாட்சியர் கண்ணப்பன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் வட்டாட்சியர் கார்த்திக் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் சரவண குமார், கிருஷ்ணசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம், கோபி உதவி ஆய்வாளர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

இம்முகாமில் வருவாய்த்துறை, சமூக நலத்துறை காவல்துறை மற்றும் ஊரக வளர்ச்சி, வீட்டுவசதி வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்றுக் கொண்டனர்.

மேலும், முகாமில் கலந்துகொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் கலைஞரின் கனவு இல்லம், மகளிர் உரிமைத் தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்பான விண்ணப்பங்கள் கோரிக்கை மனுக்களாக பெறப்பட்டன.

முகாமில், உள்ளாட்சி மற்றும் வருவாய்த் துறையை சேர்ந்த அலுவலக ஊழியர்கள், கோபி காவல்துறையை சேர்ந்த அதிகாரிகளின் மேற்பார்வையில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை மக்களுடன் முதல்வர் திட்ட அதிகாரிகளுக்கு உடனுக்குடன் அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News