தேர்தலுக்குப்பின் குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்க முதல்வர் திட்டம்: அமைச்சர்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் தலா 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

Update: 2023-02-07 09:45 GMT

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்த ஜீப்பில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசும்போது, திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், கல்லூரிகளில் படிக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.1000, மக்களை தேடி மருத்துவச் சேவை, 48 மணி நேர உயிர்காக்கும் விபத்து உதவித் திட்டம், பெண்களுக்கு அரசு பணியில் இட ஒதுக்கீடு உயர்வு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை எடுத்துரைத்தார்.

பொங்கல் பண்டிகையின் போது இலவச வேட்டி சேலை வழங்காததால், வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்ததாக முன்னாள் முதல்வர் ஈபிஎஸ் குற்றச்சாட்டு மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் தேர்தல் ஆணையத்தில் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கையில், அரசியல் காரணமாக எதிர்க்கட்சிகள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவார்கள்.ஆனால் அதில் எந்த உண்மையும் இல்லை என்றார்.

சத்தி தாளவாடி, ஜீரஹள்ளி பகுதிகளில் பயிர்களை சேதப்படுத்தும் கருப்பன் யானையை பிடிக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். பிரச்சாரத்தின் போது, ஈரோடு மாநகராட்சி 26வது வார்டு திமுக கவுன்சிலர் சரண்யா, கருங்கல்பாளையம் 26வது வார்டு செயலாளர் சங்கமேஸ்வரன் மற்றும் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த அனைத்து திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News