ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல், பதுக்கல்: பொதுமக்கள் புகார் அளிக்கலாம்

Erode News- ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல், பதுக்கல் குறித்து கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

Update: 2024-07-27 09:45 GMT

Erode News- ரேஷன் அரிசி கடத்தல் குறித்து புகார் அளிக்கலாம் (பைல் படம்).

Erode News, Erode News Today- ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல், பதுக்கல் குறித்து கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

ஈரோடு குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் அலுவலக செய்திக்குறிப்பு:-

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல்துறை தலைவர் ஜோசி நிர்மல்குமார் உத்தரவின் படியும், கோவை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் அறிவுறுத்தலின் படியும், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான புகார் மற்றும் தகவலை தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறைக்கு 18005995950 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

புகார் மற்றும் தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். இந்த தகவல் குறித்து ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினர், பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் சுவரொட்டிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News