ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணி நீக்கம்
ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.;
ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலராக பிரியாதேவி என்பவர், கடந்த ஜனவரி மாதம் முதல் பணியாற்றி வந்தார். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த இவர், குழந்தை திருமணங்கள் தடுப்பு, குழந்தை தத்தெடுப்பு விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தாமல் இருந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் பாதுகாப்பு மாநில திட்ட இயக்குநர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார். பிரியாதேவி பணி நீக்கம் செய்யப்பட்டதையொட்டி ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலராக, திருப்பூர் மாவட்ட அலுவலர் செல்வன், கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.