முதல்வர் ஸ்டாலின் வரும் 19ம் தேதி ஈரோடு வருகை: 45 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார்
ஈரோட்டில் வரும் டிச.20ம் தேதி நடக்கும் அரசு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 45 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் என அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஈரோட்டில் வரும் டிச.20ம் தேதி நடக்கும் அரசு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 45 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் என அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஈரோடு மாவட்ட தெற்கு, வடக்கு திமுக செயல்வீரர்கள் கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான முத்துசாமி பேசியதாவது:-
வரும் டிச.19ம் தேதி மதியம் கோவையில் இருந்து விஜயமங்கலம் சுங்கச்சாவடி வழியாக பெருந்துறை வழியாக ஈரோட்டுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகிறார். ஈரோடு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். பின்னர் மேட்டுக்கடையில் தனியார் மண்டபத்தில், கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார்.
தொடர்ந்து மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர் சந்திரகுமார் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து, டிச.20ம் தேதி காலை சோலாரில், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
சோலாரில் 10 ஏக்கரில் காய்கறி மார்க்கெட் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். திமுகவை பார்த்து பயப்படுவதாலேயே நடிகர் விஜய் தி.மு.க.வுக்கு எதிரான கருத்து களை பேசி வருகிறார். திமுக எதையும் சாதிக்கும் என்று. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்று நிரூபித்து உள்ளோம்.
இதேபோல் அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் திமுக பலத்தை நிரூபிப்போம். அம்பேத்கர் இருந்திருந்தால் திமுக ஆட்சியின் செயல்பாடுகளை பார்த்து சந்தோஷம் அடைந்து இருப்பார். புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரசு தேவையான உதவிகளை செய்து இருக்கிறது
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் நெசவாளர் அணி மாநில செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர் சந்திரகுமார், எம்பி அந்தியூர் செல்வராஜ், மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் குணசேகரன், அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம், மேயர் நாகரத்தினம், மாநகர செயலாளர் சுப்பிரமணி, கேபிள் டி.வி. வாரிய முன்னாள் தலைவர் குறிஞ்சி சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.