செல்லீஸ்வரர் கோவில் கல்தரைத் தளம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்

ஈரோடு அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில் கல்தரைத் தளம் அமைக்கும் பணிக்கு முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.;

Update: 2024-03-13 14:54 GMT

செல்லீஸ்வரர் கோவிலில் கல்தரைத் தளம் அமைக்கும் பணியினை சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில் கல்தரைத் தளம் அமைக்கும் பணிக்கு முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில் ரூ.23.30 லட்சத்தில் கல்தரைத் தளம் அமைக்கும் பணியினை  கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 

அதனை தொடர்ந்து, அந்தியூர் செல்லீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற இதற்கான விழாவில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினார் . பின்னர், ஏற்கனவே துவக்கி வைத்து நடைபெற்று வரும் சுற்றுச்சுவர் அமைத்தல் பணியினை அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இவ்விழாவில், அந்தியூர் பேரூராட்சி மன்றத் தலைவர் பாண்டியம்மாள், பேரூர் திமுக செயலாளர் காளிதாஸ்,  பேரூராட்சி துணைத் தலைவர் பழனிச்சாமி,  பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் யாஸ்மின் தாஜ், கவிதா, சேகர், மணிகண்டன், ஈரோடு வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News