மறைந்த எம்.பி. கணேசமூர்த்தியின் வீட்டிற்கு சென்று ஸ்டாலின் ஆறுதல்
மறைந்த ஈரோடு மதிமுக எம்பி கணேசமூர்த்தி வீட்டிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.;
மறைந்த எம்பி கணேசமூர்த்தியின் வீட்டிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உள்படம்:- முன்னதாக, மறைந்த எம்பி கணேசமூர்த்தியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மறைந்த ஈரோடு மதிமுக எம்பி கணேசமூர்த்தி வீட்டிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி எம்பி ஆக இருந்த கணேசமூர்த்தி (வயது77). இவர் கடந்த 24ம் தேதி ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனது வீட்டில் சல்பாஸ் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக, குடும்பத்தினர் அவரை மீட்டு ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த 28ம் தேதி கணேசமூர்த்தி எம்பி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த குமாரவலசு பகுதியில் உள்ள தோட்டத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஈரோட்டில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை குமாரவலசில் உள்ள கணேசமூர்த்தி எம்பி தோட்டத்து வீட்டிற்கு சென்றார். அங்கு கணேச மூர்த்தி எம்பி படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து, கணேசமூர்த்தி எம்பியின் மகன் கபிலன், மகள் தமிழ்பிரியா ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வின் போது, அமைச்சர் முத்துசாமி உட்பட பலர் உடன் இருந்தனா். பின்னர், சிறிது நேரம் அங்கிருந்த முதலமைச்சர் மீண்டும் தான் தங்கி இருக்கும் பயணியர் மாளிகைக்கு கிளம்பி சென்றார்.