நீங்கள் நலமா திட்டத்தின் கீழ் ஈரோடு பயனாளியிடம் கருத்து கேட்ட முதல்வர்

Erode news- நீங்கள் நலமா திட்டத்தின் கீழ் ஈரோடு பெரியசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற பயனாளியிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

Update: 2024-07-05 12:30 GMT

Erode news- நீங்கள் நலமா திட்டத்தின் கீழ் மாணவன் ரவிகிருஷ்ணாவின் தந்தை முருகனிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கருத்து கேட்டறிந்தார்.

Erode news, Erode news today- நீங்கள் நலமா திட்டத்தின் கீழ் ஈரோடு பெரியசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற பயனாளியிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் உரியவர்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்குடன் மக்களுக்கும், அரசிற்கும் இடைவெளியைக் குறைத்திடும் வகையில் மக்களின் கருத்துகள் மற்றும் பின்னூட்டங்களைப் பெற நீங்கள் நலமா என்ற புதியதொரு திட்டம் கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று (04.07.2024) தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து பல்வேறு பயனாளிகளை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.

அந்த வகையில், ஈரோடு ரங்கம்பாளையம் தொழிற்நுட்ப கல்லூரியில் இண்டஸ்டிரி 4.0 திட்டத்தின் கீழ் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தொழிற்பயிற்சி பயின்று வரும் மாணவன் ரவிகிருஷ்ணாவின் பெற்றோரிடம்  நீங்கள் நலமா திட்டத்தின் கீழ், முதலமைச்சர் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசினார்.

இதுகுறித்து மாணவன் ரவிகிருஷ்ணாவின் தந்தை முருகன் தெரிவித்ததாவது, நான் ஈரோடு மாவட்டம் பெரியசெட்டிபாளையம் பகுதியில் வசித்து வருகிறேன். என் மனைவி அஞ்சலாதேவி. எனக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் ரங்கம்பாளையம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்று வருகின்றனர்.

எனது மகனுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன் மாத உதவித்தொகை ரூ.750, விலையில்லா சைக்கிள், சீருடை, சீருடை தைப்பதற்கான கூலி, பாட புத்தகங்கள், காலணி மற்றும் பஸ் பாஸ் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.

 தமிழ்நாடு முதலமைச்சர் என்னை தொலைபேசி மூலமாக நேரடியாக தொடர்பு கொண்டு, எனது மகன் (ரவிகிருஷ்ணா) எவ்வாறு பயின்று வருகிறான் எனவும், கல்லுரியில் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொககை, சீருடை போன்ற அனைத்து நலத்திட்டங்களும் முறையாக வழங்கப்படுகின்றதா எனவும் கேட்டறிந்தார்.

முதலமைச்சர் எங்களை போன்ற ஏழை, எளிய மக்களுடன் நேரடியாக தொலைபேசியில் பேசியதை நினைக்கும் பொழுது மிகவும் பெருமையாக, மகிழ்ச்சியாகவும் உள்ளது. எங்கள் மீது அக்கறை கொண்டு. எங்கள் மகனின் படிப்பை பற்றி தொலைபேசியில் கேட்டறிந்த, அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News