அறச்சலூர் நவரசம் கல்லூரியில் சக்ரா சதுரங்க வல்லபாநாத் கோப்பைக்கான செஸ் போட்டி..!
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் நவரசம் கல்லூரியில் நடைபெற்ற சக்ரா சதுரங்க வல்லபாநாத் கோப்பைக்கான செஸ் போட்டி நடந்தது.
அறச்சலூர் நவரசம் கல்லூரியில் நடைபெற்ற சக்ரா சதுரங்க வல்லபாநாத் கோப்பைக்கான செஸ் போட்டியில் 400 பேர் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்ட சதுரங்க சர்க்கிள், தமிழ்நாடு மாநில சதுரங்க கழகம் மற்றும் சக்கரா விஷன் இந்தியா பவுண்டேஷன் அறக்கட்டளை இணைந்து நடத்தும் சக்கரா சதுரங்க வல்லபாநாத் கோப்பைக்கான 27வது மாநில ரேபிட் மற்றும் 26வது மாநில ப்ளீட்ஸ் செஸ் போட்டி அறச்சலூர் அருகே உள்ள நவரசம் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
இந்த போட்டிக்கு நவரசம் கலை அறிவியல் கல்லூரி தலைவர் தாமோதரன், செயலர் செந்தில்குமார், பொருளாளர் பழனிச்சாமி, தாளாளர் கோவிந்தசாமி, நவரசம் பள்ளியின் தாளாளர் அருள் கார்த்திக் மற்றும் இணைச் செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்போட்டிகளை சக்ரா விஷன் இந்தியா பவுண்டேஷன் அறக்கட்டளை தலைவருமான ராஜசேகர், சக்ரா விஷன் இந்தியா பவுண்டேஷன் டிரஸ்ட் அறங்காவலர் பிரபாவதி ராஜசேகர், கல்லூரி முதல்வர் செல்வம் மற்றும் ஈரோடு மாவட்ட சதுரங்க சர்கில் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி போட்டியை துவக்கி வைத்தனர்.
போட்டியானது, ராபிட் பிலிட்ஸ் என 2 பிரிவுகளில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களுடைய திறமைகளை காட்டினர். இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகையாக ரூ.50 ஆயிரமும், கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில், பொருளாளர் மாஸ்டர் ஸ்ரீ ஜி, கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் கவிதா, சதுரங்க சங்கில் செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.