பாஜக நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்ற ஈரோடு தொகுதி தமாகா வேட்பாளர் விஜயகுமார்
Erode news- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயகுமார் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.;
Erode news- பாஜக நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்ற ஈரோடு தொகுதி வேட்பாளர் விஜயகுமார்.
Erode news, Erode news today- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயகுமார் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழகத்தை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல் கட்டத்திலேயே (ஏப்ரல் 19ம் தேதி) நடைபெறுகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி என்று 3 அணிகளும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன. எனவே 4 முனை போட்டி என்பது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளராக விஜயகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இதைக் கண்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள கட்சி பொறுப்பாளர்களும் கூட்டணிக் கட்சியினரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற வேட்பாளர் விஜயகுமார் ஆதரவாளர்களுடன் ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். பின்னர், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி, ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வி.சி.வேதானந்தம் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், அணி பிரிவு தலைவர்கள் உட்பட கட்சியின் நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்றார்.