முதலமைச்சரின் பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-03-18 11:45 GMT

ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற புதியதாக விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் தகுதிகள் பெற்று இருப்பின் விண்ணப்பிக்கலாம். ஆண்குழந்தையின்றி இரண்டு பெண்குழந்தைகள் (2-வது பெண்குழந்தைக்கு 3-வயதுக்குள்) அல்லது ஒரு பெண்குழந்தை இருப்பின் (3-வயதுக்குள்). பெற்றோர்களில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்பநல அறுவைசிகிச்சை செய்து கொண்டு ஆண்டு வருமானம் ரூ.72,000/-த்துக்குள் ( ரூபாய் எழுப்பத்து இரண்டாயிரம் மட்டும்) பெற்று இருக்க வேண்டும்.

ஏற்கனவே இத்திட்டத்தில் பயனடைந்து முதலீட்டு பத்திரம் பெற்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களின் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் சம்மந்தப்பட்டவரின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக்கத்தின் நகல் ஆகியவற்றுடன் வரும் ஏப்ரல் 10-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வட்டாரத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக களப்பணியாளர்ளிடம் சமர்ப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News