கோபியில் பெண்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கில் திட்டங்கள் குறித்து விளக்கம்

கோபியில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2024-10-22 11:45 GMT

கோபியில் பெண்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.

கோபியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், ரத்னம் டவர்ஸில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அறிவுறுத்தலின் படி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கில், தமிழ்நாட்டின் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் ஏழை, எளிய கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை அரசிடமிருந்து எளிதாக பெற கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்திற்கென தனியே www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது குறித்து தெரிவிக்கப்பட்டது.


தொடர்ந்து, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் மூலம் மாவட்ட அளவில், நிதியினை முறையாக கையாளுதல், சொத்துரிமை, குடும்ப வன்முறையிலிருந்து உரிய பாதுகாப்பு, இலவச சட்ட உதவி, அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்திடும் வகையில்,  இக்கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் என மொத்தம் 115 பெண்கள் பங்கேற்றனர்.

இக்கருத்தரங்கில் மாவட்ட சமூகநல அலுவலர் சண்முகவடிவு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) செல்வராஜ், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கீதா, கோபி குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர், காயத்ரி, சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர் (கோபி வட்டம்) நளினா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளத்தில் தகுதி உடையவர்கள் உறுப்பினராக பதிவு செய்வது குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News