ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11,046 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-02-09 13:00 GMT

கோப்பு படம்

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதையடுத்து 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. முதல்கட்டமாக முன்களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள், இரண்டு கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.தமிழகத்தில் கடந்த 10ம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது

ஈரோடு மாவட்டத்தில் முன்களப்பணியாளர்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் நிறைவடைந்த 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் என மொத்தம் 24 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதுவரை நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 11 ஆயிரத்து 46 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணியாற்ற உள்ள ஊழியர்களுக்கு முன்களப்பணியாளர்கள் என்ற வகையில் விரைவில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்றும், இதற்காக சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறையினர் கூறினர்.

Tags:    

Similar News