பவானி நகர காவல்துறை சார்பில் இரத்த தான முகாம்

ஈரோடு மாவட்டம் பவானி அரசு மருத்துவமனையில், நகர காவல்துறை சார்பில் ரத்ததான முகாம் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது.;

Update: 2023-04-23 03:00 GMT

பவானி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இரத்த தான முகாம்.

பவானி அரசு மருத்துவமனையில், நகர காவல்துறை சார்பில் ரத்ததான முகாம் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானி அரசு மருத்துவமனையில், நகர காவல்துறை, உயிர் இரத்ததான அறக்கட்டளை, பவானி குமாரபாளையம் ஒருங்கிணைந்த ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து இரத்த தான முகாம் நடத்தினர். இம்முகாமிற்கு பவானி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அமிர்தவர்ஷினி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பவானி காவல்துறை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். பவானி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கோபால் கிருஷ்ணன் வரவேற்றார்.


இம்முகாமில், காவல்துறையினர், தன்னார்வலர்கள் என சுமார் 40க்கு மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர். இரத்ததானம் செய்த அனைவருக்கும் பாராட்டு சான்றிதழுடன் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை ஆலோசகர் ரஞ்சித் குமார், ஈரோடு உயிர் அறக்கட்டளை கவியரசு, மூலப்பாளையம் பால் உற்பத்தியாளர்களின் சங்கச் செயலாளர் மற்றும் கால்நடை செயற்கை முறை கருவூட்டனர் தங்கமணி, ஈரோடு ரத்த வங்கி மருத்துவர் சசிகலா, மருத்துவர்கள், காவல்துறையினர், போக்குவரத்துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News