ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பாஜக எம்எல்ஏ சரஸ்வதி தீவிர பிரச்சாரம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, வாக்கு கேட்டு வீடு வீடாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.;

Update: 2023-02-15 09:15 GMT
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பாஜக எம்எல்ஏ சரஸ்வதி தீவிர பிரச்சாரம்

ஈரோடு பெரியார் நகர் பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏ சரஸ்வதி.

  • whatsapp icon

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 27-ம் தேதி நடக்கிறது. இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக, பாஜக கூட்டணி கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில்,  ஈரோடு மாநகர் 45வது வார்டு பெரியார் நகரில் உள்ள 80 அடி ரோடு, மெயின் ரோடு, மாணிக்க விநாயகர் வீதி 9 மற்றும் 10வது குறுக்கு தெரு, கோல்டன் மற்றும் கிரீன் அப்பார்ட்மெண்ட் ஆகிய பகுதிகளில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து பாரதீய ஜனதா கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி தலைமையில் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் கேட்டு வீடு வீடாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்த பிரச்சாரத்தின் போது, பாரதீய ஜனதா கட்சியின் சூரம்பட்டி கிழக்கு மண்டல் தலைவர் நிர்மல் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களான மோகனப்பிரியா, கிருஷ்ணவேணி, அமுதா, மாணிக்கம், குணசேகரன், சுரேஷ், கதிர், பாலா, விஸ்வ பாலாஜி, பரமேஸ்வரன், மௌலீஸ்வரன், பொன்னுசாமி, மாணிக்கசுந்தரம், லோகநாதன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News