இறந்த மனைவியை ரகசியமாக புதைத்த கணவன்: முதியவரிடம் விசாரணை

பவானிசாகர் அருகே, இறந்த மனைவியை யாருக்கும் தெரியாமல் கணவன் புதைத்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2021-10-19 10:15 GMT

கோப்பு படம்

ஈரோடு மாவட்டம், பவானிசாகரை அடுத்த பெரிய கள்ளிப்பட்டி, ஓலக்காரன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 75; இவரின் மனைவி துளசிமணி, 68; இவர்கள் வசிக்கும் வீட்டில் இருந்து,  ஒரு கி.மீ., தொலைவில் விவசாய தோட்டம் உள்ளது. அங்கு இருவரும் இரவில் தங்கி கொள்வது வழக்கம்.



கடந்த மூன்று நாட்களாக துளசிமணியை காணாத நிலையில், தோட்டத்தில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. அப்பகுதியினர் அளித்த தகவலின்படி,  பவானிசாகர் போலீசார், சத்தி டி.எஸ்.பி., ஜெயபாலன் சென்றனர். ஆறுமுகத்திடம் விசாரித்தனர். அப்போது,  ''கடந்த, 14ம் தேதி தோட்டத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்த துளசிமணி வலிப்பு வந்து இறந்தார். அவருக்கு, 10 ஆண்டுகளாக வலிப்பு நோய் உள்ளது. ஆயுதபூஜை தினம் என்பதால், மனைவி உடலை அடக்கம் செய்ய யாரும் வர மாட்டார்கள் என்று கருதி, என்னால் முடிந்த அளவுக்கு குழி தோண்டி, மனைவியை புதைத்து விட்டேன்,'' என்றார். 



இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவக்குழுவினர், மூதாட்டி உடலை இன்று தோண்டி எடுத்து, உடற்கூறு பரிசோதனை மேற்கொள்கின்றனர். இந்த முடிவு வந்த பிறகே, இயற்கை மரணமா அல்லது கொலையா? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News