பவானிசாகர் அணை நீர்மட்டம் 97.32 அடியாக உயர்வு: நீர்வரத்து 568 கன அடியாக சரிவு

Erode News- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (22ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 97.32 அடியாக உயர்ந்த நிலையில், அணைக்கு நீர்வரத்து 568 கன அடியாக சரிந்தது.

Update: 2024-08-22 06:30 GMT
Erode News- கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணை.

Erode News, Erode News Today- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (22ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 97.32 அடியாக உயர்ந்த நிலையில், அணைக்கு நீர்வரத்து 568 கன அடியாக சரிந்தது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணை நீர்மட்டம் 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதியான, நீலகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழையே அணையின் முக்கிய நீர்வரத்துக்கு பிரதானமாகும். 

இந்நிலையில், நீலகிரி மலைப்பகுதி அவ்வப்போது மழை பெய்து வருவதால் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக இருந்து வந்தது. இதனிடையே, மழைப்பொழிவு குறைந்ததால் அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்துள்ளது. 

அணைக்கு நீர்வரத்து நேற்று (21ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 6,714 கன அடியாக இருந்த நிலையில், இன்று (22ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 568 கன அடியாக சரிந்தது. அதேசமயம், நேற்று காலை 97.26 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 97.32 அடியாக உயர்ந்தது. அதேபோல், அணையில் நீர் இருப்பு 26.63 டிஎம்சியிலிருந்து 26.68 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. 

மேலும், அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 500 கன அடி நீரும், அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு 700 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 1,300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News