பவானிசாகர் அணை நீர்மட்டம் 95.21 அடியாக உயர்வு
Erode News- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (7ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 95.21 அடியாக உயர்ந்தது.
Erode News, Erode News Today- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (7ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 95.21 அடியாக உயர்ந்தது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாகும். இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பெய்த மழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் 95 அடியை தாண்டியது. இதனிடையே, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது.
நேற்று (6ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,646 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (7ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,193 கன அடியாக சரிந்தது. அதேசமயம், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 95.14 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 95.21 அடியாக உயர்ந்தது. அதேபோல், நீர் இருப்பும் 25.09 டிஎம்சியிலிருந்து 25.14 டிஎம்சியாக அதிகரித்தது.
அணையில் இருந்து பாசனத்துக்கு அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு 900 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 100 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 1,005 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், பாசனத்துக்காக காலிங்கராயன் வாய்க்காலில் திறக்கப்பட்டு வந்த நீர் நிறுத்தப்பட்டுள்ளது.