பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.18 அடியாக உயர்வு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (1ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 93.18 அடியாக உயர்ந்தது.

Update: 2024-08-01 02:39 GMT

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (1ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 93.18 அடியாக உயர்ந்தது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணை 105 அடி உயரம், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டது. இந்த அணை நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, கனமழை பெய்தது.

இதனால், கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. இதனிடையே, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து வருகிறது. 

நேற்று (31ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 11,969 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (1ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 7,293 கன அடியாக குறைந்தது. அதேசமயம், அணை நீர்மட்டம் நேற்று காலை 92.26 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 93.18 அடியாக உயர்ந்தது. 

அதேபோல், அணையில் நீர் இருப்பு 23.08 டிஎம்சியிலிருந்து 23.71 டிஎம்சியாக அதிகரித்தது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,155 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.  மேலும், பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 8.2 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News