பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 70.02 அடியாக உயர்வு

Erode news- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (15ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 70.02 அடியாக உயர்ந்தது.

Update: 2024-07-15 05:15 GMT

Erode news- பவானிசாகர் அணை.

Erode news, Erode news today- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (15ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 70.02 அடியாக உயர்ந்தது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை தமிழகத்தில் 2வது மிகப்பெரிய மண் அணையாகும். இந்த அணை ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக இருக்கிறது. 

இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழைப்பொழிவைப் பொறுத்து அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக உள்ளது.

நேற்று (14ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,266 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (15ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,369 கன அடியாக அதிகரித்தது.

அணையின் நீர்மட்டம் நேற்று காலை 69.73 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 70.02 அடியாக உயர்ந்தது. அதேபோல், அணையில் நீர் இருப்பு 10.84 டிஎம்சியிலிருந்து 10.96 டிஎம்சியாக அதிகரித்தது. 

மேலும், அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 955 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 150 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 1,105 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News