பவானிசாகர் அணை நீர்மட்டம் 69.31 அடியாக உயர்வு

Erode news- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (10ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 68.67 அடியிலிருந்து 69.31 அடியாக உயர்ந்தது.

Update: 2024-07-10 02:45 GMT

Erode news- பவானிசாகர் அணை.

Erode news, Erode news today- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (10ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 68.67 அடியிலிருந்து 69.31 அடியாக உயர்ந்தது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். இந்த அணை ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக இருக்கிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இதனால், அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.

அணைக்கு நீர்வரத்து நேற்று (9ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,308 கன அடியாக இருந்த நிலையில், இன்று (10ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,649 அடியாக அதிகரித்தது. 

நேற்று காலை 68.67 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 69.31 அடியாக உயர்ந்தது. விரைவில் 70 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், நீர் இருப்பு 10.40 டிஎம்சியிலிருந்து 10.66 டிஎம்சியாக அதிகரித்தது. 

மேலும், அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 205 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News