பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 68.67 அடியாக உயர்வு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (9ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 68.46 அடியிலிருந்து 68.67 அடியாக உயர்ந்தது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (9ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 68.46 அடியிலிருந்து 68.67 அடியாக உயர்ந்தது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளாக நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், மாயாறும் உள்ளன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.
நேற்று (8ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,977 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (9ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,308 கன அடியாக சரிந்தது.
அணையின் நீர்மட்டம் நேற்று காலை 68.46 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 68.67 அடியாக உயர்ந்தது. அதேபோல், அணையில் நீர் இருப்பு 10.32 டிஎம்சியிலிருந்து 10.40 டிஎம்சியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து வினாடிக்கு 205 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை இல்லை.