பவானிசாகர் அணை நீர்மட்டம் 68.26 அடியாக உயர்வு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (7ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 68.26 அடியாக உயர்ந்தது.;
பவானிசாகர் அணை.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (7ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 68.26 அடியாக உயர்ந்தது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால், அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது. நேற்று (6ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 548 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (7ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,318 கன அடியாக அதிகரித்தது.
அணையின் நீர்மட்டம் நேற்று காலை 68.02 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 68.26 அடியாக உயர்ந்தது. அதேபோல், அணையில் நீர் இருப்பு 10.14 டிஎம்சியிலிருந்து 10.23 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையில் இருந்து வினாடிக்கு 205 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது.