பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 67.14 அடியாக உயர்வு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (4ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 67.14 அடியாக உயர்ந்தது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று (4ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 67.14 அடியாக உயர்ந்தது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை. 105 அடி நீர்மட்ட உயரம் உள்ள இந்த அணையால் 3 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்தநிலையில், பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால், அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.
நேற்று (3ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,538 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (4ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,348 கன அடியாக சரிந்தது.
அணையின் நீர்மட்டம் நேற்று காலை 66.81 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 67.14 அடியாக உயர்ந்தது. அதேபோல், அணையில் நீர் இருப்பு 9.66லிருந்து 9.79 டிஎம்சியாக அதிகரித்தது. மேலும், அணையில் இருந்து 205 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது.